Kaveri (River) & Ooty in Thiruvannamalai
திருவண்ணாமலை ஊட்டியாகி காவிரி ஓடும்
https://responsiblecitizensiyakkam.blogspot.in/p/trees-on-every-hills-campaign.html
https://responsiblecitizensiyakkam.blogspot.in/p/trees-on-every-hills-campaign.html
15. மார்ச் .2018
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம் மலையனூர் செக்கடி கிராமத்தில் - அரசாங்க பள்ளிகளில் குழந்தைகள் சேர்ப்பு குறித்து சுற்று வட்டாரத்தில் இருக்கும் பத்து பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பயிற்சி மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி மலையனூர் செக்கடி பள்ளியில் நடைபெற்றது.
இதில் ஆசிரியராக இருந்த இப்பொழுது கீழ்ப்பாச்சார் பள்ளியில் ஆசிரியராக இருக்கும் திரு. சஞ்சிவி அவர்களிடம் நமது "மலைகள் தோறும் மரங்கள்" திட்டத்தை பற்றி கூறி அதனை பள்ளிக் குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டிய அவசியத்தை பற்றி கூறியிருந்தேன் . அதனால் இந்த நிகழச்சியில்
பேசினால் பல பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அவர்களின் பெற்றோர்களிடமும் இந்த திட்டத்தை கொண்டு செல்லலாம் என்று அழைத்தார் .
உணவு இடைவேளைக்குள் பேசவேண்டியிருந்ததால் சுருங்க கூறி விளங்க வைக்க முயற்சித்தேன் .
" எந்த அரசியல் வாதியும் கூட வழங்க முடியாத ஒரு வாக்குறுதியை நான் உங்களுக்கு தருகிறேன் - நாம் இங்கு காவிரி தண்ணீரை கொண்டு வருவோம் " என்றேன் .
வந்திருந்தவர்கள் முகத்தில் ஆச்சரியமும் கிண்டலும் ஒன்றாக தெரிந்தது .
" என்னடா இங்க பக்கத்தில் ஓடுற தென்பெண்ணையையே நமக்கு முழுசுமா கிடைப்பதில்லையே காவிரி எப்படி கிடைக்கும்னு யோசிக்கிறீங்க ?? சரியா ??? "
" இன்னொரு அதிரடி வாக்குறுதி தருகிறேன் !!!. அதுவும் நீங்கள் அரசாங்கப் பள்ளிகளில் சேர்க்கை எண்ணிக்கை குறைந்து வருவது பற்றி பேசுவதால் , இதனை முக்கியமாக கூறுகிறேன் " என்றேன் .
" மலைகள் சூழ்ந்த இந்த அதிக வெயில் அடிக்கும் திருவண்ணாமலை மாவட்ட கிராமங்களை ஊட்டியை போலப் குளு குளு பிரதேசமாக நம்மால் மாற்ற முடியும் " என்றேன் .
" குழந்தைகள் ஊட்டியில் பள்ளிக்கு செல்வத்தைப் போல் சந்தோஷமாக குளிர் மிகு சூழ்நிலையில் இங்கும் பள்ளிக்கு வருவார்கள் "
" சாத்தியமா ? முடியுமா ??? என்று யோசிக்கிறீர்களா ??
நிச்சயமா முடியும் ??
எப்படின்னு கேக்கறீங்களா ????
நமது மலைகள் தோறும் மரங்கள் திட்டம் மூலமாகத்தான் நாம் காவிரியை நமது ஊரிலிருந்து தரையிறக்க முடியும்.
வங்காள விரிகுடா கடலில் தான் அதிகளவில் மேகங்கள் உருவாகிறது. இந்த மேகங்கள் காற்றினால் மேற்கு நோக்கி தள்ளப்பட்டு இடையில் குளுமையான பிரதேசங்கள் எங்கிருந்தாலும் அங்கு தரையிறங்கி மழை துளிகளாகி ஓடைகளாகி பின்பு ஆறாகி மீண்டும் கடலில் கலக்கின்றது.
கடலில் உருவாகும் மேகங்கள் குளுமையான பிரதேசங்களில் மட்டுமே நீராவியானது ஆவி குளிர்ந்து மீண்டும் நீராகும். தரைமட்டத்தைக் காட்டிலும் மலைகள் உயரமாக இருப்பதால் மேகங்களை தடுக்கும் வாய்ப்பு மலைகளுக்கு அதிகம் . அதிலும் மரங்கள் அடர்த்தியாக இருக்கும் போது தான் மலைகளும் குளிர்ச்சியாக இருக்கும். ஆனால் இன்றைக்கு திருவண்ணாமலை மாவட்டத்தின் மலைகள் குளிர்ச்சியாக உள்ளனவா ??? என்பதே உங்களை நோக்கி நான் போடும் கேள்வி .
வெயில் காலத்தில் அதிக வெப்பநிலை பதிவாகும் மாவட்டங்களில் திருவண்ணாமலைக்கும் வேலூருக்கும் தான் எப்பவும் போட்டி !!!!!
ஏனென்றால் இந்த இரண்டு மாவட்டங்களில்தான் மலைகள் அதன் தொடர்ச்சிகள் அதிகம் . இந்த மலைகளின் மீது மரங்கள் இல்லாததால் வெயில் பாருங்கள் மீது பட்டு எதிர் ஒளியாக மேலும் வெப்பம் அதிகமாகிறது . அதுவே இந்த மலைகளில் எல்லாம் மரங்களின் பசுமை போர்வை இருக்குமானால் இந்த மலைகளும் குளிர்ச்சியாகி மேகங்களை ஈர்த்துவிடும் .
நாம் திருவண்ணாமலை மாவட்டத்தை ஊட்டி , கொடைக்கானல் போல குளுமையான பிரதேசமாக மாற்ற வேண்டும், மாற்ற முடியும்.
"செய்வோமா ??? " என்று கேட்டவுடன் "செய்வோம்" என்றார்கள் அனைவரும் ஒரு குரலில்.
இப்பொழுது ஒரு பெரியவர் எழுந்து " யப்பா ! இந்த ஊரு 40 வருஷத்திற்கு முன்னாடி ஊட்டி மாதிரி குளு குளு ன்னு தான் இருந்ததுப்பா , இங்க நிறைய ஆறெல்லாம் ஓடிச்சு , மக்கள் வளமாதான் இருந்தோம். ஆனா படிப்படியா மரத்தெல்லாம் மலையில வெட்டிப்புட்டோம் . அப்படியே காய்ஞ்சு காய்ஞ்சு பாரு நாங்கல்லாம் கருத்தே போயிட்டோம் """
அந்த பெரியவரின் பேட்டி காணொளி இதோ
மலையனூர் செக்கடி பள்ளி மாணவன் ஆலமரக் கன்றுடன் மல்காபூர் ஏரி , திருவண்ணாமலை மாவட்டம் |
ஆசிரியர் பணி செய்து கொண்டு உலக நன்மைக்காக குன்றுகளில் மர விதைகளை தூவி , மனித இயங்களை கவர்ந்த
ReplyDeleteஆசிரியர் திரு. சஞ்சீவி அவர்கட்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் .
அன்புடன்
எல்.தருமன்
18. பட்டி.